Published
1 year agoon
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் கூடி வரும் நாள் எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் ஆகாத நாளாக பார்க்கப்படுகிறது. இன்று சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள்தான் இன்று கூடாத நாளா என்று பார்ப்போம்.
இன்று கூடாத நாள்
5.3.2022 சனி கிழமை
ஏழு நாட்களும் நல்ல நாட்கள் தான்.
இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்கள் தான்.
ஆனால் சில கிழமையும் குறிப்பிட்ட கிழமையும் நட்சத்திரமும் சேரும் நாள் கூடாத நாளாக மாறி விடுகிறது.
இது பற்றிய உண்மைகளை சிலாதர் மகரிஷி முதன்முதலில் அறிந்துகொண்டார்.
பூலோக மக்கள் நன்மைக்காக நம்முடைய ஆதி மூல முதல் குரு அகத்தியர் இது பற்றிய புராண உண்மைகளை நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே உபதேசம் செய்து விட்டார்!!!
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கூடாதநாள் ஆகும்.
இந்த நாள் அன்று புதிய நிறுவனம் ஆரம்பிக்க கூடாது
புதிய முயற்சி ஆரம்பிக்கக் கூடாது
குழந்தைக்காக கணவன் மனைவி உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
சுப காரியங்கள் எதுவும் ஆரம்பிக்க கூடாது
கடந்த காலங்களில் சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் பலர் பிறந்து இருப்பார்கள். இவர்கள் ஏதாவது ஒரு ஆன்மீக அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு அல்லது முக்கிய பொறுப்புக்கு வந்தால் அந்த அமைப்பு பிரபல விருத்தி அடையாது.
அவர்கள் தம்முடைய வாழ்நாள் முழுவதும் சுயம்புலிங்கம் இருக்கும் கோயிலுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்ய வேண்டும்
சுயம்புலிங்கம் இருக்கும் கோயிலில் அடிக்கடி உழவாரப்பணி செய்ய வேண்டும்
சுயம்புலிங்கம் கோயிலில் கோயிலுக்கு தன்னால் ஆன பண உதவி பொருள் உதவி உடல் உழைப்பு போன்றவைகளை தரவேண்டும்.
சுயம்பு லிங்கம் இருக்கும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை யாராவது ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் அதை சட்டரீதியாக மற்றும் தர்ம ரீதியாக மற்றும் அரசியல் ரீதியாக போராடி மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் மூலமாக கூடாத நாட்களில் பிறந்ததால் ஏற்பட்ட துயரங்கள் மற்றும் அரைகுறை அதிர்ஷ்டம் போன்றவை முழுமையாக நீங்கிவிடும்
“முற்பிறவிகளில் சில தகாத செயல் செய்தவர்கள் மட்டுமே இந்த கூடாத நாட்கள் ஒன்றில் பிறவி எடுப்பார்கள்” என்று நம்முடைய முன்னோர்களாகிய சித்தர் பெருமக்கள் உபதேசம் செய்து உள்ளார்கள்.
ஜோதிடர் கை வீரமுனி ஸ்வாமிகள்
ராஜபாளையம்
போன் நம்பர்:90921 16990