Latest News
சுவையான சாத்தூர் காராச்சேவு செய்வது எப்படி
பேக்கரி மற்றும் ஸ்வீட் கடைகளில் மிக்சர், பக்கோடா போன்ற சுவைமிகு ஸ்னாக்ஸ்களுக்கு பிறகு அனைவரும் விரும்பி வாங்குவது காராச்சேவு. இந்த காராசேவு எல்லா கடைகளில் கிடைத்தாலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தான் இந்த காராச்சேவு பிரபலமானது அந்த காராச்சேவு எப்படி செய்வது என பார்க்கலாம்.
4 பல் பூண்டு
சிறிது கட்டி பெருங்காயம்
கால் ஸ்பூன் மிளகுத்தூள்
1 டீ ஸ்பூன் மிளகாய்த்தூள்
தேவையான அளவு உப்பு
இவை எல்லாவற்றையும் லேசாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு 1 கப் கடலை மாவு எடுத்துக்கொண்டு 2 டீஸ்பூன் அரிசி மாவு அதனுடன் சேர்த்துக்கொண்டு முதலில் மாவை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு லேசாக ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மாவை மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு தண்ணீர் கலந்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக மாவை பிசைந்து கொள்ளவேண்டும்.
பிறகு எண்ணெயை அடுப்பில் வைத்து முறுக்கு பிழிவது போல முறுக்கு பிழியும் குழலில் எண்ணெய்யில் பிழியவும்.
நன்றாக மொறு மொறு என வெந்து வந்த பிறகு அந்த முறுக்கை எடுத்து காராச்சேவு போல உடைத்து விட்டு கொள்ளலாம்.
இப்போது சுவையான காராச்சேவு ரெடி.