சத்யராஜ் பெயர்தான் முதலில்- சசிக்குமாரின் வேண்டுகோள்

42

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமான சசிக்குமார் தற்போது டஜன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் படங்களாவன  கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன்,  கத்துக்குட்டி சரவணன் இயக்கும் படம் என, நடித்து வருகிறார்.

விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் இவரது படம்‘எம்ஜிஆர் மகன் இது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராமின் படம். இந்த படத்தில், சசிக்குமாரின் தந்தை எம்.ஜி.ராமசாமி என்ற வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டிலில் எனது பெயருக்குப் பின்னால் சத்யராஜ் பெயர் இடம்பெற்றது. இது எனக்கு வருத்தத்தை அளித்தது என சசிக்குமார் கூறியுள்ளார்.

சத்யராஜ் மாபெரும் நடிகர். அவரது பெயரை முதலில் போடுங்கள் என்று டைரக்டர் பொன்ராமிடம் சொன்னேன். அதைப் புரிந்துகொண்ட அவர், சத்யராஜ் பெயரையே முதலில் போட்டார்’ என்றார்.

பாருங்க:  தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?
Previous articleமீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்
Next articleசினிமா ஹீரோ போல ஸ்டாலின்