80களில் புகழ்பெற்ற நடிகர் நடிகையர்களாக இருந்தவர்கள் சத்யராஜ், ராதிகா வில்லாதி வில்லன், தாய்நாடு, வீரப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் இவர்கள். இருப்பினும் ஸ்ட்ராங்கான ஜோடியாக எந்த ஒரு படத்திலும் இவர்கள் சேர்ந்து நடிக்காதது ஆச்சர்யமான விசயமே.
ஸ்ட்ராங்கான ஜோடி என்றால் ஒரு படத்தில் ஆரம்ப காட்சியில் கதாநாயகன் கதாநாயகி காதலில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை பயணிப்பது அது போல் காட்சிகளில் இவர்கள் முழுவதும் நடிக்கவில்லை. வயதான கெட் அப்பில் வில்லாதி வில்லனில், வீரப்பதக்கத்தில் முறைப்பெண் போலவும் சத்யராஜுடன் ஜோடி சேராதது போலத்தான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இவர்கள் சமீபத்தில் கோவை சென்றபோது விமானத்தில் சந்தித்துள்ளார்கள். நீண்ட நாட்கள் கழித்து சத்யராஜை சந்தித்தது மகிழ்ச்சி என ராதிகா கூறியுள்ளார்.
Lovely to meet #satyaraj after a long time, travelling to Coimbatore together @Sibi_Sathyaraj we had director A.L.Vijay for company too pic.twitter.com/l2dA1End3m
— Radikaa Sarathkumar (@realradikaa) March 18, 2021

