எப்போதும் இல்லாத அளவு இந்த சட்டமன்ற தேர்தல் சற்று வித்தியாசமாக வருகிறது. தமிழ்நாட்டில் நீண்ட காலம் இருந்த கலைஞர், ஜெயலலிதா இருவரும் இந்த தேர்தலின்போது உயிருடன் இல்லை.
இந்நிலையில் புதியதாக ரஜினிகாந்த், கமல் உட்பட பலரும் இத்தேர்தலில் களம் காண்கின்றனர்.
ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி மகிழ்மதி இயக்கம் என்ற பெயரில் ஏழை மக்களுக்கு சேவை செய்து வரும் சத்யராஜின் மகள் திவ்யாவும் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டி இடுவார் என தகவல்கள் வருகிறது.
அவர் எந்த கட்சியில் போட்டி இடுவார் என தெரியவில்லை. இது குறித்து சத்யராஜ் கூறும்போது. என் மகளை நான் மிக தைரியமான பெண்ணாக வளர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவாக பக்கபலமாக நான் இருப்பேன் என சத்யராஜ் கூறியுள்ளார்.