சத்யராஜ் நடிக்க வந்து 43 வருடம் ஆச்சாம்

15

நடிகர் சத்யராஜ் கடந்த 1978ல் வெளிவந்த சட்டம் என் கையில் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வில்லன் என்றாலும் மெயின் வில்லன் இல்லை சும்மா அடியாள் போலத்தான். இது போல கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த சத்யராஜ் மோகன் நடித்த நூறாவது நாள் படத்தின் மூலம் மொட்டை வில்லனாக அமர்க்களப்படுத்தினார். தொடர்ந்து 24 மணி நேரம், விக்ரம், காக்கிச்சட்டை, எனக்குள் ஒருவன், தம்பிக்கு எந்த ஊரு என பல படங்களில் வில்லனாக நடித்தார்.

சத்யராஜ் கதாநாயகனாக நடித்த முதல் படம் சாவி அதிலும் ஆன் ட்டி ஹீரோ என்ற வில்லத்தன கதாபாத்திரம் ஆகும். முதன் முதலில் முழுமையான கதாநாயகனாக பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் நடித்தார் இதன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.

தொடர்ந்து பூவிழி வாசலிலே, மக்கள் என் பக்கம், அமைதிப்படை, பிரம்மா, வால்டர் வெற்றிவேல் என பல படங்களில் நடித்து பெரும் வெற்றி பெற்றார் சத்யராஜ்.

இன்றோடு சத்யராஜ் நடிக்க வந்து 43 வருடங்கள் ஆகிறதாம். அதை அவர் மகன் சிபி சத்யராஜ் டுவிட்டரில் தெரிவித்ததோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  விவேக் மறைவு- சத்யராஜ் உருக்கம்
Previous articleவறுமையின் நிறம் சிவப்பா- கமல் விளக்கம்
Next articleகொரோனா எல்லோரையும் செதுக்கி விட்ருச்சு- சூரி