Latest News
நாளை முதல் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி
விருதுநகர் மாவட்டமும் மதுரை மாவட்டமும் சேர்ந்த ஒரு பகுதியாய் வருவது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை என்ற இடம் சென்று அங்கிருந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
கடந்த 2015ல் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக இந்த மலைப்பகுதிக்கு பக்தர்கள் எந்நேரமும் அனுமதிக்கப்படுவதில்லை. முன்பு எந்த நேரம் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.
தற்போது அப்படி நிலை இல்லை. அமாவாசை, பெளர்ணமி நாட்களில் மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது. அந்த நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவும் செய்கின்றனர்.
இந்நிலையில் வருகின்ற நாட்களில் பிரதோஷம், பெளர்ணமி போன்றவை வருவதால் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
