Connect with us

சதுரகிரிக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

Latest News

சதுரகிரிக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி

விருதுநகர் மாவட்டத்திலும் மதுரை மாவட்டத்திலும் சேர்ந்து சதுரகிரி மலைத்தொடர் அமைந்துள்ளது. சதுரகிரியில் புகழ்பெற்ற சுந்தர மஹாலிங்கம் ஸ்வாமி கோயில் உள்ளது.

இங்கு சுந்தரமஹாலிங்கம் , சந்தனமஹாலிங்கம் ஸ்வாமி கோவில் அருகருகில் உள்ளது. இந்த கோவிலும் மலையும் சித்தர்களின் ஹெட் குவார்ட்டர்ஸ் என்று சொல்லக்கூடிய சித்தர்களின் பரிபூரண அருள் நிறைந்தது.

இங்கு 18 சித்தர்களும்,இன்னும் கோடானு கோடி மகான்களும் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. இதனால் இந்த கோவிலுக்கு அதிகமான மக்கள் குவிந்து விடுவர்.

சில வருடங்கள் முன் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலர் பலியானதால் தற்போது அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு மட்டும்தான் அனுமதிக்கப்படுகின்றனர்.

அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களுக்கு முன்னதாக வரும் பிரதோஷ நாட்களில் இருந்து பக்தர்கள் இங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தற்போது  மே 1-ந் தேதி வரை 4 நாட்கள் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாருங்க:  மஞ்சு வாரியருக்கு தொல்லை கொடுத்த இயக்குனர் கைது

More in Latest News

To Top