Entertainment
பெயரை மாற்றி சதீஷ் படத்துக்கு டஃப் கொடுத்த வடிவேலு
நடிகர் சதீஷ் நடிப்பில் நாய் சேகர் என்ற படம் தயாராகியுள்ளது. இந்த நிலையில் வடிவேலு நீண்ட நாட்கள் கழித்து தனது தடைகள் எல்லாம் முடிந்து அடுத்த படங்களில் நடிக்க தயாராகினார்.
லைகா தயாரிப்பில் அடுத்தடுத்து படங்கள் நடிக்க இருக்கும் நிலையில் முதல் படமாக நாய் சேகர் என்ற படத்தை சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
நாய் சேகர் என்ற டைட்டிலை சுராஜ் குழுவினர் படத்திற்கு வைத்த நிலையில் அந்த பெயரை சதீஷ் படத்துக்கு வைத்துள்ளதை அறிந்த வடிவேல் படக்குழுவினர் சதீஷ் படக்குழுவினரிடம் பெயரை மாற்ற சொல்லி வலியுறுத்தினர். ஆனால் நாய் சேகர் என்ற பெயருக்கேற்ப நிறைய காட்சிகளை எடுத்துவிட்டோம் இனி அதை திரும்ப மாற்ற முடியாது என நாய் சேகர் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை சதீஷ் படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில் வடிவேலுவும் நாய் சேகர் பட டைட்டிலில் லேசாக சேஞ்ச் செய்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று வைத்து பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு விட்டனர்.
அதிலும் ஒரிஜினல் வேறு என்று டைட்டிலில் குறிப்பிட்டுள்ளனர்.
#NaaiSekarReturns First Look! pic.twitter.com/jS3QJhUVwd
— Actor Vadivelu (@Vadiveluhere) October 8, 2021
