சதீஷை செமயாக கலாய்த்த சிவகார்த்திகேயன்

35

நடிகர் சதீஷும் , சிவகார்த்திகேயனும் சரியான இணைபிரியாத நண்பர்கள் என பலருக்கும் தெரியும். மெரினா படம் தொடங்கி பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் திரைப்படங்களிலும் சரி நேரிலும் சரி இருவரும் பயங்கரமாக கலாய்த்து கொள்வார்கள்.

சமீபத்தில் டுவிட்டரில் ஒரு மெசேஜை தட்டி விட்ட சதீஷ் கீழ்க்கண்டவாறு கூறி உள்ளார். அதாவது தமிழகத்தில் அழகான ஆண்கள் அதிகம் உள்ள மாவட்டம் குறித்து லயோலா காலேஜ் நடத்திய ஆய்வில் அழகான ஆண்கள் அதிகம் உள்ளதாக தனது சொந்த ஊரான சேலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக பதிவை பகிர்ந்து இருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கருத்துகணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதும் நடத்தப்பட்டது என்றும்,  அதனாலதான் சென்னை முதலிடம் பெறவில்லை என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  அடுத்து அம்பானி வீட்டு கல்யாணம் வருதே - ஸ்டாலினை கிண்டலடித்த கஸ்தூரி