Entertainment
சசிக்குமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல்
காமன்மேன் என்கிற தலைப்பில் செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்க நடிகர் சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது.
ஆனால் இந்த தலைப்பின் உரிமை எங்களிடம் தான் உள்ளது என்று ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிடம் மேல்முறையீடு செய்தது.
சுசீந்திரனுக்கு இணை இயக்குனரான அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்த் சார்பில் 2018 ஆண்டே காமன் மேன்” என்கிற தலைப்பு தென்னிந்திய திரைப்பட சாம்பரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்சார் போர்ட் தற்போது, ‘காமன்மேன்’ டைட்டிலை ஏஜிஆர் ரைட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு முறையாக சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், அறிவிப்பு வெளியான சசிகுமார் பட டைட்டிலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
