சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு

30

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து வருகிறார். இதில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற அவர் தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27 அன்று ரிலீஸ் ஆகிறார்.

அவரது வருகையை அரசியல் உலகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. காரணம் தற்போதுள்ளது போல் அல்லாமல் ஏதாவது அரசியல் மாற்றம் ஏற்படும் என அனைவரும் நினைத்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவுக்கு திடீரென இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.இதனால் மேல்சிகிச்சைக்காக  சசிகலாவை பெங்களூருவில் உள்ள சிவாஜி நகர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாருங்க:  வீடியோ கேம் விளையாடுவதை தடுத்த தந்தை - கொடூரமாக கொலை செய்த மகன்