Latest News
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும்
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொத்து குவிப்பு வழக்கிற்காக தண்டனை பெற்று கடந்த 4 ஆண்டுகளாக சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் வரும் ஜனவரி 27ல் சசிகலா வெளிவர இருந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவும் வந்து விட்டது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த சசிகலாவின் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
