Latest News
அதிமுக பொதுச்செயலர் என சசிகலா வாழ்த்து
அதிமுக கட்சியில் ஜெ. மறைந்த பிறகு சசிகலா கட்டுப்பாட்டில் வர இருந்த அதிமுகவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கைப்பற்றினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து கொள்ள கட்சி இவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.
இருந்தாலும் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா , கட்சி தன்னுடையதாகவே நினைத்து எல்லா வேலைகளும் செய்து வருகிறார்.
நாளை தீபாவளி என்பதால் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து சொல்கிறேன் என சசிகலா அதிமுக பொதுச்செயலர் என்று அச்சடிக்கப்பட்டு தீபாவளி வாழ்த்து வெளியிட்டிருக்கிறார்.
இது சற்று குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.
