Latest News
ஜனவரி 27ல் சசிகலா விடுதலை- முழு விவரம்
கடந்த அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதாவின் நிழல் போல் இருந்தவர் சசிகலா. இவர் உடன்பிறவா சகோதரி என்றே ஜெயலலிதா சொல்லி வந்தார். சசிகலாவின் உறவினர் சுதாகரனின் திருமணத்தை மிக பிரமாண்டமாக ஜெ நடத்தி வைத்தார்.
ஒரு கட்டத்தில் சசிகலாவை போயஸ் தோட்டத்தை விட்டே துரத்தினார் ஜெ. பின்பு மீண்டும் சேர்த்துக்கொண்டார்.
இறுதியாக ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்த உடன் சசிகலா அதிமுக கட்சியை கைப்பற்ற எண்ணினார். முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம் இது போல விசயங்களுக்கு உடன்படவில்லை நாளடைவில் சசிகலா அணியில் இருந்த அனைவருமே பன்னீர்செல்வம் பக்கம் வந்தனனர் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறை சென்றார். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து வரும் ஜனவரி 27ல் அவர் விடுதலையாகிறார். அவரை கர்நாடக எல்லை பகுதியான ஓசூர் அருகே இருக்கும் அத்திபள்ளி வரை போலீஸ் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை செய்யும் போது, அவரை அழைத்துச் செல்ல ஏரளாமான தொண்டர்கள் வரலாம் என்பதால் அன்றைய தினம் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், அவரது தொண்டர்கள், அவர்களது வாகனங்களை சிறை வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு வர முடியாத வகையில் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
அவரது பாதுகாப்பை கருதி தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற கைதிகளை போல் இரவு 7 மணிக்கு இல்லாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம்.
