நடிகை சரிதா நாயர் மீண்டும் கைது

24

கேரளாவை சேர்ந்தவர் நடிகை சரிதா நாயர். இவர் மலையாள திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். அதன் மூலம் தனது பிரபலத்தை வளர்த்துக்கொண்ட இவர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கினார்.

சூரியஒளி தகடுகள் அமைத்துத் தரும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்து பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சரிதா நாயர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர் மீது கோழிக்கோடை சேர்ந்த அப்துல் மஜீது என்பவர் புகார் அளித்துள்ள நிலையில் சோலார் பேனல் மோசடி வழக்குகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்கு இவர் ஆஜராகாமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இந்த வழக்கு கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதமே இவ்வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிப்பதாக இருந்தது ஆனால், சரிதா நாயர் ஆஜராகாததால் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கில் ஆஜராகாததால் சரிதா நாயருக்கு எதிராக கோழிக்கோடு நீதிமன்றம் கைது செய்வதற்கான பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

பாருங்க:  பர்ஸ்ட் லுக்கே போஸ்டரே டபுள் மீனிங்- மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து
Previous articleஆர்.கே சுரேஷுக்கு பெண் குழந்தை பிறந்தது
Next articleஇந்திய மக்களுக்கு துணை நிற்போம்- பாக் பிரதமர் இம்ரான்கான்