பங்குனி மாதம் வந்து விட்டாலே பங்குனி வெயில் பல்லை காட்டி அடிக்க ஆரம்பித்து விடும். அடுத்தடுத்து வரும் சித்திரை , வைகாசி மாதங்களில் வெயில் அனைவரையும் வைத்து செய்ய காத்திருக்கிறது.
வெயில் என்று வந்து விட்டாலே வெளியில் வெயிலில் அலைபவர்கள் நாவறட்சியால் தவிப்பவர்கள் உடனே நாடுவது குளிர்பானத்தைதான்.
இதில் ப்ரிட்ஜில் வைத்த அயல்நாட்டு பானங்களை தவிர்த்து சர்பத் போன்ற பானங்களை அருந்துவது சிறந்தது ஆகும்.
தாகம் தணித்துக்கொள்வதற்கு நன்னாரி சர்பத் அதில் கொஞ்சம் எலுமிச்சை, சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்து சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.
இது உடலுக்கு குளிர்ச்சியை நலத்தையும் கொடுக்கும் ஐஸ் சேர்த்து சாப்பிடுவதை குறைத்தால் இன்னும் நலமாக இருக்கும் ஐஸ் சேர்ப்பதால் ஜலதோஷம் போன்றவைகள் உருவாகும்.
தேவைப்படுபவர்கள் ஐஸை குறைத்து நன்னாரி சர்பத் அருந்தலாம்.