நண்பரின் மறைவு சரத்குமார் வருத்தம்

நண்பரின் மறைவு சரத்குமார் வருத்தம்

சரத்குமாரின் நண்பரான பிரபல கதாசிரியர் ஈரோடு செளந்தர் நேற்று மரணம் அடைந்துள்ளார் .இது குறித்து சரத்குமாரின் அறிக்கை.

1998 – இல் வெளியான சிம்மராசி திரைப்படத்தை இயக்கியவரும், சேரன் பாண்டியன், நாட்டாமை, இளவரசன், சமுத்திரம், பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்பட கதாசிரியராகவும் பணியாற்றிய அருமை நண்பர், அன்புச் சகோதரர் ஈரோடு செளந்தர் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
எண்ணற்ற படங்களில் அவருடன் பயணித்த நாட்களை நினைத்து பார்க்கும்போது, அவரது இழப்பு தனிப்பட்ட முறையில் என்னை பாதித்துள்ளது. தமிழக அரசின் விருதுகள் பெற்று திரைத்துறையில் தடம் பதித்த “மீசைக்கார நண்பன்” ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.