நடிகர் சரத்குமாருக்கு கொரோனா

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா

கண் சிமிட்டும் நேரம் படத்தில் அறிமுகமானவர் சரத்குமார். அதன்பின்பு சேரன் பாண்டியன், நாட்டாமை, சிம்மராசி என பல படங்களில் நடித்து சரத்குமார் தமிழின் முன்னணி நடிகராக பிரதிபலித்தார்.

திமுக, அதிமுகவிலும் இணைந்து பணியாற்றிவிட்டு சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தற்போது அக்கட்சி தலைவராக இவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில் சரத்குமாருக்கு கொரோனா பாஸிட்டிவ்  உறுதியாகியுள்ளதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

டாக்டர்கள் அவரை நன்றாக பார்த்துக்கொள்வதாக ராதிகா கூறியுள்ளார்