சரண்யா மோகனிடம் பரதம் கற்கும் சிம்பு

சரண்யா மோகனிடம் பரதம் கற்கும் சிம்பு

வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். இந்த படங்களுக்கும் பிறகும் ஒரு சில படங்களில் நடித்த சரண்யா மோகன் பின்பு திருமணமாகி செட்டிலாகி விட்டார்.

பரதம் நன்கு தெரிந்த இவரிடமிருந்து நடிகர் சிம்பு பரதம் கற்று வருகிறார். இதற்கான புகைப்படங்கள் கசிந்து வருகிறது. இது படத்துக்காக ஸ்பெஷலாக கற்கிறாரா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட விருப்பத்திற்காக கற்கிறாரா என தெரியவில்லை.

இருப்பினும் இப்படங்கள் வைரலாகி வருகின்றன.