அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆரம்பத்தில் இவர் சினிமா கிராஃப் மெதுவாகவே சென்று கொண்டிருந்தது. சில வருடங்கள் முன்பாக இயக்குனர் ரஞ்சித்தின் கபாலி படத்தில் இசையமைத்த உடன் இவர் ஏறுமுகம் கண்டார்.
திறமை இருந்தாலும் முதல் படம் வெற்றி பெற்றாலும் பாடல்கள் பேசப்பட்டாலும் உச்ச நடிகரான ரஜினி படத்துக்கு இசையமைத்த உடன் இவர் வேற லெவல் இசையமைப்பாளராகி விட்டார்.
இன்று வரும் முன்னணி படங்கள் பலவற்றுக்கு இவர் இசையமைக்கிறார். சமீபத்தில் வந்த பரியேறும் பெருமாள், இவர் மகள் பாடி வெளியிட்ட எஞ்சாயி எஞ்சாமி போன்ற பாடல்களுக்கு இசையமைத்து ஹிட்டாக்கியுள்ளார்.
இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாள் ஆகும்.