பாக்யராஜின் படங்களில் இலைமறை காயாக பல அந்தரங்க விசயங்கள் சொல்லப்பட்டிருக்கும் ஆபாசம் என்பது இருக்காது. அதனாலேயே பாக்யராஜ் தமிழக ரசிகர் ரசிகைகளால் கொண்டாடப்பட்டார்.
முந்தானை முடிச்சு படத்தில் முருங்கைக்காயின் மகத்துவத்தை சொல்லி பெரும் புகழ்பெற்றவர் பாக்யராஜ் அவர்கள்
இப்போது அவரது மகனும் அதுபோல ஒரு கதையில் நடிக்கிறார். முருங்கைக்காய் சிப்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ஸ்ரீஜர் என்பவர் இயக்குகிறார். சாந்தனு நடிக்க ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கின்றனராம்.
புதிதாக திருமணமான தம்பதிகளை வைத்து முதலிரவில் நடக்கும் காட்சிகளை காமெடியாக விரசமில்லாமல் சொல்ல இருக்கின்றனராம்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதில் பாக்யராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்