ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் சந்தானம் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார்.
தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் சந்தானம். காமெடியனாக நடிப்பதை விட்டுவிட்டு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என முடிவெடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ‘மாநகரம்’ படத்திற்கு வசனம் எழுதிய கார்த்திக் யோகி உருவாக்கியுள்ள ஒரு சயின்ஸ் பிக்சர் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இதில் சிறப்பு என்னவெனில் இப்படத்தில் சந்தானம் ஹீரோ, காமெடியன், வில்லன் என மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார்.
சந்தானம் இதுவரை இரட்டை வேடங்களில் கூட நடித்திராத நிலையில், மூன்று வேடங்களை அவர் ஏற்கவுள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் துவங்கவுள்ளது.