Latest News
கர்ம வினைகளை கரைக்கும் சந்தனகாப்பு பரிகாரம்- இந்த நாளை தவற விடாதீர்கள்
நாம் வாழ்ந்து வரும் பூமியில் சந்தன மரம் தோன்றிய நாள் சித்திரை மாதத்தில் வரும் சதய நட்சத்திர நாள்!!!
இந்த நாளில் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் சந்தன கட்டையால் அரைத்த சந்தனத்தை சிவ லிங்கத்ததிற்கு காப்பு அணிவிக்க வேண்டும்.
சந்தன காப்பு அணிந்து அறிவிப்பதற்கு சிவாச்சாரியார் அல்லது கோயில் பூசாரிக்கு ரூபாய் 108 கண்டிப்பாக குரு தட்சிணையாக தர வேண்டும்.
இந்த சுபகிருது,வருடம் சித்திரை மாதத்தில் வரும் சதயம் நாள்
25.4.2022 திங்கட்கிழமை இரவு 7.48 முதல்
26.4.2022 செவ்வாய்க் கிழமை இரவு 7.06 வரை இருக்கிறது.
இந்த நாள் முழுவதும் அவ்வாறு சந்தனக்காப்பு அணிவித்து மறுநாள் காலையில் சென்று முறைப்படி கோயில் பூசாரிக்கு அல்லது சிவாச்சாரியாருக்கு மீண்டும் ரூபாய் 108 தரவேண்டும் .
அதன் பிறகு அந்த சந்தன காப்பில் ஒரு பகுதியை பிரசாதமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதை வீட்டில் பூஜையறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் அதை நெற்றியில் அணிந்து கொண்டும் வரலாம்.
தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய காவல் தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய கருப்பசாமி, சுடலைமாடன், முனீஸ்வரர், வீரபத்திரர், ஜடாமுனி போன்றவர்களுக்கு இதேநாளில் உடல் முழுக்க சந்தன காப்பு அணிவிக்கலாம்.
குறைந்தது அரை கிலோ முதல் அதிகபட்சம் 3 கிலோ வரை சந்தனக்கட்டை மூலமாக அரைக்க வேண்டும் .அரைத்த சந்தனத்தை அவ்வாறு காவல் தெய்வங்களுக்கு பூசலாம்.
இதனால் நமக்கு கிடைக்கும் புண்ணியத்தின் அளவு மிகவும் பிரம்மாண்டமானது.
வசதி உள்ளவர்கள் இந்த நாளில் குறைந்தது ஐந்து சிவாலயங்களில் இவ்வாறு சந்தனம் அனைத்து தரலாம்.
கடந்த எட்டு முற்பிறவிகளில் நாம் செய்த அத்தனை கர்ம வினைகளும் பெருமளவு இதன் மூலமாக குறையும்.
பலருக்கு 20 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகள் வரை பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் தொடர்ந்து கொண்டிருக்கும். அது முடிவுக்கு வந்து விடும்!!!
நம் அனைவருக்கும் ஆதிமூல முதல் குருவாக இருக்கும் அகத்திய மகரிஷியின் அருளால் இந்த தெய்வீக ரகசியம் நமக்கு கிடைத்திருக்கின்றது.
அவருக்கு நன்றி கூறி விட்டு இந்த தெய்வீக திருப்பணியை நாம் ஒவ்வொருவரும் தொடங்குவோம்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்