Entertainment
சண்முகநாதனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதல்வர்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். இவர் கலைஞர் முதல்வராக இருந்தபோதும் முதல்வராக இல்லாதபோதும் அவருடனேயே இருந்தவர்.
கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே கலைஞருடன் இவர் இருந்து வந்தார். கலைஞர் நிகழ்ச்சிகளில் அவர் கலைஞர் பேசுவதை வேகமாக குறிப்பு எடுப்பதில் வல்லவர்.
இந்த பிறவி கலைஞருக்காக அர்ப்பணிக்கப்பட்டது என சொல்லி வந்தார். கலைஞர் இறந்தாலும் அவர் மறைந்த பிறகும் வந்து கோபாலபுரத்தில் வந்து பணிகளில் ஈடுபட்டார்.
இந்நிலையில் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று மறைந்தார்.
இன்று அவர் உடல் தேனாம்பேட்டையில் இருந்து மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதனால் முதல்வர் ஸ்டாலின் நீண்ட நேரம் அங்கேயே இருந்து தகனம் நடக்கும் வரை இருந்து அஞ்சலி செலுத்திவிட்டே சென்றார்.