சஞ்சய்தத்துடன் கங்கனா ரணாவத் சந்திப்பு

சஞ்சய்தத்துடன் கங்கனா ரணாவத் சந்திப்பு

நடிகர் சஞ்சய் தத்துடன் ஹைதராபத்தில் சந்தித்து கொண்டதை கங்கணா ரணாவத் வெளியிட்டுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சில மாதங்களுக்கு முன் சுஷாந்த் மரணத்தை தொடர்ந்து வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக கங்கனா ரணாவத் கொந்தளித்து பேசி இருந்தார்.

வாரிசு நடிகர்களும், அவர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்களுமே சுஷாந்த் மரணத்துக்குக் காரணம் என்று பேசி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சஞ்சய் தத், ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘சடக் 2’ திரைப்படம்  போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் சஞ்சய் தத்தை சந்தித்ததாக ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கங்கனா பகிர்ந்திருந்தார். அந்தப் பதிவில் கங்கனா கூறியிருப்பதாவது:

நாங்கள் இருவரும் ஹைதரபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளோம் என்று எனக்குத் தெரியவந்தபோது நான் இன்று காலை சஞ்சு சாரின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றேன். அவர் மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் நீண்ட ஆயுளுக்காகவும், உடல்நலத்துக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்’என கங்கணா ரணாவத் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.