மத்திய அரசு அனுமதி இல்லாமல் விடுதலை ஆனாரா சஞ்சத் தத்? – பரபரப்பு செய்தி

189
மத்திய அரசு அனுமதி இல்லாமல் விடுதலை ஆனாரா சஞ்சத் தத்

மத்திய அரசின் அனுமதியை பெறாமலேயே நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்து குண்டுவெடிப்பு நடந்த போது, தனது வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கிகளை வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 6 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஒரு வருடம் குறைக்கப்பட்டு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், நன்னடத்தை காரணமாக அவர் 8 மாதங்கள் முன்பே விடுதலை செய்யப்பட்டார்.

அவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை அளிக்குமாறு ராஜிவ் கொலை வழக்கில் பல வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதில், மத்திய அரசின் அனுமதி பெறாமலேயே மகாராஷ்டிரா அரசு சஞ்சத் தத்தை விடுதலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது எனில், தமிழக அரசு மட்டும் ஏன் இன்னும் ராஜூவ் கொலையாளிகளை விடுவிப்பதில் தயக்கம் காட்டுகிறது என்பது புரியவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  பல கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறவுள்ளது!