இன்று சங்கடஹர சதுர்த்தி

இன்று சங்கடஹர சதுர்த்தி

விநாயகருக்குரிய சங்கடஹர சதுர்த்தி விழா இன்று நடைபெறுகிறது சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருப்பது நமக்கு நன்மைகளை தரும் .

நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி.  சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

இன்று சங்கட ஹர சதுர்த்திக்கு மாலையில் விநாயகர் ஆலயம் சென்று வழிபடுங்கள். உங்கள் துன்பங்களை விநாயகரிடம் சொல்லி வழிபடுங்கள். துன்பங்கள் அனைத்தையும் விநாயகர் தீர்த்து வைப்பார்.