Tamil Flash News
அடித்து உதைப்பார்.. மொட்டை அடித்து சித்ரவதை செய்வார் – சந்தியாவின் தாய் கண்ணீர் பேட்டி
படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன் அவரை கொடுமை படுத்தியதாக சந்தியாவின் தாய் கண்ணீர் பேட்டி கொடுத்துள்ளார்.
சென்னையில் துணை நடிகை சந்தியாவை, அவரது கணவர் கொலை செய்து, அவரின் உடலை பல பாகங்களாக வெட்டி, 4 மூட்டைகளில் கட்டி சென்னையில் பல இடங்களில் போட்டுவிட்டார். தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சினிமா மோகத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கொலை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், அவரின் புகாரை சந்தியாவின் தாய் மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் “என் மகளை பாலகிருஷ்ணன் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்தார். மற்ற ஆண்களை வைத்து அவளின் உடலில் பச்சை குத்தினார். நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்தார். அவளுக்கு அடிக்கடி மொட்டை அடித்து விடுவார். சந்தியா விவாகரத்து பெற விரும்பினார். ஆனால், நான்தான் தடுத்தேன். நான் அடிக்கடி பணம் கொடுத்து அனுப்புவேன்” என தெரிவித்துள்ளார்.