நான் சந்தியாவை கொலை செய்யவில்லை – கணவர் திடீர் பல்டி

301

சந்தியாவை தான் கொலை செய்யவில்லை என அவரின் கணவர் பாலகிருஷ்ணன் திடீர் பல்டி அடித்துள்ளார்.

சென்னையில் துணை நடிகை சந்தியாவை, அவரது கணவர் கொலை செய்து, அவரின் உடலை பல பாகங்களாக வெட்டி, 4 மூட்டைகளில் கட்டி சென்னையில் பல இடங்களில் போட்டுவிட்டார். தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சினிமா மோகத்தில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கொலை செய்தேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்தி வெளியானது.

ஆனால், நேற்று அவரை ஆலந்தூர் நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்த போது ‘நான் கொலை செய்யவில்லை.. நான் ஜெயிலுக்கு போயிட்டு திரும்பி வந்து விடுவேன்” என அவர் செய்தியாளர்களிடம் கூலாக கூறினார். இது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

பாருங்க:  ஒருவழியாக பிடிபட்ட சின்னதம்பி யானை