Entertainment
ஒருவரை தாழ்த்தி பேசுவது சரியல்ல- சந்தானம் மீது பாயும் சூர்யா குரூப்ஸ்
இரண்டு நாட்களாக சூர்யா செய்திகள்தான் ஹாட் டாபிக் ஆக உள்ளது. பாமக அன்புமணி சூர்யாவிடம் ஏன் ஜெய்பீம் படத்தில் எங்களின் குறியீடை காண்பித்தீர்கள் என்று கேட்டதற்கு அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இதனை அடுத்து பாமக மட்டுமல்லாமல் வன்னியர் அமைப்புகள் அனைத்தும் களத்தில் இறங்கின. சூர்யாவுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை அவை அறிவித்துள்ளன.
சூர்யாவுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும் ஆதரவும் ஒரு சேர கிடைத்து வருகின்றன. சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன்.
இந்த நிலையில் பாமகவுடன் நெருங்கிய நட்பில் சந்தானம் உள்ளார். அவர் ஒருவரை உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை தாழ்த்தக்கூடாது என சந்தானம் கூறி இருந்தார். உடனே சூர்யா ரசிகர்களும் ஆதரவாளர்களும் சந்தானத்துக்கு சாதி வெறி முத்திரை குத்தி சாதி வெறிசந்தானம் என டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
