ஒரு காலத்தில் லொள்ளு சபா, சகலை வெஸஸ் ரகளை போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலரையும் சென்றடைந்த சந்தானம் மன்மதன் படத்தின் மூலம் காமெடி நடிகரானார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி செய்த சந்தானம் ஒரு கட்டத்தில் படங்களில் தனியாக காமெடி நடிகராக இருப்பதை விட்டு விட்டு ஹீரோவாக மாறினார். இவருக்கேற்ற வகையில் காமெடி சப்ஜெக்ட் உள்ள கதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகிறார் இவர்.
இவரின் ஒவ்வொரு படமும் வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் அதைப்பற்றி இவர் கவலைப்படுவதில்லை கடந்த சில வருடங்களாகவே தனி காமெடி ஹீரோவாக தொடர் படங்களில் நடித்து வருகிறார் இவர்.
தீபாவளிக்கு கூட இவர் பல பெரிய நடிகர்கள் படம் எதுவும் வராத நிலையில் இவரின் பிஸ்கோத் படம் மட்டுமே வந்தது.
இப்போது ஜான்சன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் .படத்திற்கான டைட்டிலை இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கிறார் சந்தானம்.