சந்தானத்திற்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்துக்கள்

30

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த நபர் ஆனவர் சந்தானம். பிறகு அதே விஜய் தொலைக்காட்சியில் வந்த சகலை வெஸஸ் ரகளை நிகழ்ச்சியை சின்னிஜெயந்துடன் இணைந்து வழங்கினார்.

பின்பு நடிகர் சிம்புவால் மன்மதன் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் மூலம் இவருக்கு ஏறுமுகம் தான். தொடர்ந்து பல படங்களில் காமெடி செய்து முன்னேற்றம் அடைந்தார். கமல் தவிர்த்து அனைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடன் காமெடி வேடங்களில் இணைந்து நடித்தார்.

தற்போது தனி காமெடியை தவிர்த்து விட்டு ஹீரோவாக காமெடி செய்து வரும் சந்தானம் அவர்களுக்கு இன்று பிறந்த நாள் ஆகும்.

இதை ஒட்டி அவரது நண்பர் ஆர்யா, சந்தானத்துக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளார். அவரது சபாபதி பட போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ஆர்யா.

https://twitter.com/arya_offl/status/1351960302452154368?s=20

பாருங்க:  அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் சந்தானம்