Latest News
மயிலாடுதுறை கோயில் குளத்தில் முதலை – முதலையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
மயிலாடுதுறை அருகே மணல்மேடு அருகே சாந்தங்குடி என்ற இடத்தில் என்ற இடத்தில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குளத்தில் எப்படியோ முதலை ஒன்று வந்து விட்டது.
இந்த கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ஒருவர் திரும்பி வராததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் இங்குள்ள முதலையை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவில் குளத்தில் இறங்கிய முதியவர் ராமலிங்கம் என்பவர் திரும்பி வரவில்லை. முதலையை பிடிக்க குளத்தை சுற்றி 5 இடங்களில் தூண்டில் முள்ளில் ஆடு, கோழி இறைச்சிகளை வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
