Bigg Boss Tamil 3
என்னால்தான் பிரச்சனை…தர்ஷன் வாழ்வில் இனிமேல் நான் இல்லை – கதறும் காதலி
வனிதா விஜயகுமார் செய்த காரியத்தால் தர்ஷனின் காதலி அவரிடமிருந்து விலகுவதாக கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் தர்ஷனும், ஷெரின் நட்புடன் பழகுவதை தவறாக புரிந்து கொண்டிருக்கும் வனிதா, இந்த விவககாரத்தில் தர்ஷனின் வெற்றி வாய்பு பாதிக்கப்படும் என தொடர்ந்து கூறி வருகிறார். ஷெரின் எவ்வளவு கூறியும் அவர் ஏற்கும் மனநிலையில் இல்லை. இது தொடர்பாக ஷெரின் அவரிடம் சமீபத்தில் சண்டையும் போட்டார்.
நிகழ்சிக்கு வெளியே தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி தொடர்ந்து தர்ஷனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனை ஆதரிக்குமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவர் கொடுக்கும் போட்டிகளிலும் தர்ஷனை ஆதரித்து பேசி வருகிறார். இதை மேற்கோள் காட்டியே வனிதா விஜயகுமார் தர்ஷனை டார்கெட் செய்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் ‘என்னை வைத்து தர்ஷனை டார்கெட் செய்கின்றனர். தர்ஷன் வாழ்வில் இனிமேல் நான் இல்லை. ஆனால், அவரை எப்போதும் காதலித்துக் கொண்டேதான் இருப்பேன். இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை’ என அழுது கொண்டே கண்ணீர் மல்க பேசியுள்ளர்.