தமிழில் அந்த காலங்களில் இருந்து பட்டிமன்ற பேச்சாளராக அறியப்பட்டவர் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியராக இருந்த இவர் பட்டிமன்ற பேச்சாளராக அறியப்பட்டார்.
தமிழில் சிவாஜி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு சில வருடங்கள் முன் பத்மஸ்ரீ விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்நிலையில் பிரபல தனியார் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த சாலமன் பாப்பையா, பத்மஸ்ரீ விருது கொடுக்கும்போது அதில் எழுதப்பட்ட ஹிந்தி எழுத்துக்கள் எனக்கு பிடிக்கவில்லை.
நான் ஒரு மொழிப்பற்றாளன் எனக்கு எல்லா மொழியும் பிடிக்கும். இது போல செயல்கள் வழிந்து திணிப்பது போல் உள்ளது என சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.