நம் இந்திய பாரம்பரியம் குறித்தும் கடவுளர்கள் குறித்தும் அறிய வெளிநாட்டினர் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். நம்முடைய இந்திய சன்னியாசிகளின் மடம் பலவற்றில் வெள்ளைக்காரர்களே அதிக அளவில் தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
அப்படியாக ஹாலிவுட் நடிகை ஒருவரும் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக வழங்கும் லட்சுமிதேவி பற்றி மானசீகமாக ஆத்மார்த்தாமாக சில விசயங்களை கூறியுள்ளார்.
சல்மா ஹயக் என்ற அந்த நடிகை கூறி இருப்பதாவது, அவர் கடவுள் லட்சுமியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறி இருப்பதாவது. இந்து மதத்தில் அதிர்ஷ்டம் செல்வம் அன்பு உள்ளிட்டவற்றை கொண்ட இந்த லட்சுமி தேவியை பார்த்து தியானம் செய்யும்போது மனது மிக மகிழ்வதாகவும் அக அழகை திறப்பதற்கான மிகப்பெரிய கதவு மகிழ்ச்சி எனவும் இவர் கூறியுள்ளார்.