Published
1 year agoon
சேலம் மாநகர் மாம்பழத்துக்கு புகழ்பெற்ற நகரமாகும். தமிழ் நாட்டின் பெரிய மாநகராட்சிகளில் சேலமும் ஒன்றாகும். கொங்கு மண்டலத்தில் வரும் கோவை, ஈரோடு, சேலம் இவை மூன்றும் முக்கிய மாநகராட்சியாகும்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு பிரபலம் என்பது போல சேலம் நகரில் பிரபலமான ஒரு உணவு தக்காளி குருமா. இவை சப்பாத்தி, தோசை, புரோட்டா, இடியாப்பம் என பலவற்றுக்கும் தொட்டுக்கொள்ள பயன்படுகிறது.
குருமாக்கள் பலவிதம் இருந்தாலும் சேலத்தில் கிடைக்கும் தக்காளி குருமா வித்தியாசமான சுவையுடையது.
சேலத்தின் புகழ்பெற்ற தக்காளி குருமா செய்முறை என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.
தக்காளி குருமா செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் விழுது அரைக்க
2 தேக்கரண்டி பொட்டுக்கடலை
2 தேக்கரண்டி துருவிய தேங்காய்
1 துண்டு இஞ்சி
3 பல் பூண்டு
1/2 தேக்கரண்டி சோம்பு
2 பழுத்த தக்காளி நறுக்கியது
1 துண்டு பட்டை
3 லவங்கம்
குருமா செய்ய
2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
1 சிறிய துண்டு பட்டை
4 லவங்கம்
1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது
3 பூண்டு பற்கள் நசுக்கியது
1 பச்சை மிளகாய்
கொத்தமல்லி சிறிதளவு பொடியாக நறுக்கியது
தேவையான அளவு உப்பு
2 தேக்கரண்டி சாம்பார் தூள்
செய்முறை
*ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி பொட்டுக்கடலை, 2 தேக்கரண்டி துருவிய தேங்காய்
* ஒரு துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது, 3 பல் பூண்டு
* அரை தேக்கரண்டி சோம்பு, 2 தக்காளி பழங்கள் நறுக்கியது
* ஒரு சிறிய துண்டு பட்டை, 3 லவங்கம், ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
* இப்பொழுது அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
*அதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை 4 லவங்கம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
* ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
* வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 3 பல் பூண்டு நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
*அதனுடன் ஒரு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
*பின்னர் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
* தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன், 2 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்துக் கலக்கவும்.
*சாம்பார் தூள்ன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தயாராக வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்துக் கொள்ளவும்.
* அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
* இப்பொழுது மூடி வைத்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
* குருமா கொதித்த பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான தக்காளி குருமா தயார்.