குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப மலைகளில் எல்லாம் முருகனின் அருளாட்சிதான் நடக்கிறது. பெரும்பாலான ஊர்களில் மலைக்கோவில்களில் முருகன் வீற்றிருக்கிறார்.
மிகப்பெரும் உயரமான முருகன் சிலையாக நாம் இது வரை பார்த்துக்கொண்டிருப்பது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவில் முருகனை மட்டும்தான்.
தமிழ்நாட்டிலும் சேலத்தில் முத்துமலை என்ற இடத்தில் மிக உயரமான முருகன் சிலை ஒன்று எழுப்பி கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த புத்திர கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலைமுருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்துவந்து இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது