ஒரு பெண்னை மிரட்ட நினைத்து எடுக்கப்பட்ட வீடியோவாலேயே ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜை ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களை மிரட்டி அவர் பாலியல் பலாதகாரம் செய்தது தெரியவந்தது.
கோவை, ஈரோடு, பவானி மற்றும் சேலத்திலிருந்து காக்காபாளையம் இளம்பிள்ளை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு நள்ளிரவில் பஸ்வசதி கிடையாது. எனவே ஆட்டோக்களிலேயே பயணிக்க வேண்டும். இதை பயன்படுத்தி தனது ஆட்டோவில் வரும் கல்லூரி மாணவிகளிடம் பேச்சு கொடுக்கும் மோகன்ராஜ் அவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து, நட்புடன் பழகுவார். இனிக்க இனிக்க பேசி நெருக்கமாகி விடுவார். அதில் மயங்கும் பெண்களை வீட்டுக்கு வரழழைத்து பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்து அதை காட்டி மிரட்டி தொடர்ந்து தனது காம இச்சைக்கு அவர்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் சிலரை அவரின் நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.
40க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோகன்ராஜ் வேட்டையாடியது தற்போது தெரிய வந்துள்ளது. அதில் சில பெண்கள் சேலத்தை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மோகன்ராஜ் கைது செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தலைமறைவாகி விட்டனர். இவரைப்போலவே இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த இவரது நண்பர் 2 நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவரின் சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு வீடியோவில் இருக்கும் பெண்தான் அவர் மீது புகார் அளித்துள்ளார். அதாவது, தனது கணவரை மோகன்ராஜ் ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக அவர் புகாரில் கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசரிடம் மோகன்ராஜ் அளித்தவாக்குமூலத்தில் ‘எனக்கு 30 ஆயிரம் பணத்தை தரவில்லை எனில் நீயும் நானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவேன் என அப்பெண் என்னை மிரட்டினார். எனவே, அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்து அவரை மிரட்டவே அவரை வீட்டிற்கு வரவழைத்து வீடியோவும் எடுத்தேன். ஆனால், நான் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த வீடியோ லீக் ஆகிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.