சேலத்தில் கைது செய்யப்பட்ட காம கொடூரன் ஆட்டோ ஒட்டுனர் மோகன்ராஜ் பள்ளி சிறுமிகளிடமும் தனது பாலியல் இச்சையை காட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜை ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
தனது ஆட்டோவில் வரும் கல்லூரி மாணவிகளிடம் பேச்சு கொடுக்கும் மோகன்ராஜ் அவர்களின் குடும்ப சூழ்நிலை அறிந்து, நட்புடன் பழகுவார். இனிக்க இனிக்க பேசி நெருக்கமாகி விடுவார். அதில் மயங்கும் பெண்களை வீட்டுக்கு வரழழைத்து பலவந்தமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்து அதை காட்டி மிரட்டி தொடர்ந்து தனது காம இச்சைக்கு அவர்களை பயன்படுத்தி வந்துள்ளார். இதில் சிலரை அவரின் நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார்.
40க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மோகன்ராஜ் வேட்டையாடியது தற்போது தெரிய வந்துள்ளது. அதில் சில பெண்கள் சேலத்தை விட்டு வேறு ஊருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மோகன்ராஜ் கைது செய்யப்பட்டதும் அந்த பகுதியில் பத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தலைமறைவாகி விட்டனர். இவரைப்போலவே இளம்பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்து மிரட்டி வந்த இவரது நண்பர் 2 நாட்களுக்கு முன்பு மாயமாகிவிட்டார். அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இவரின் சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு வீடியோவில் இருக்கும் பெண்தான் அவர் மீது புகார் அளித்துள்ளார். அதாவது, தனது கணவரை மோகன்ராஜ் ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக அவர் புகாரில் கூறியுள்ளார்.
இந்நிலையில், பள்ளி சிறுமிகளையும் மோகன்ராஜின் வக்கிரத்தில் இருந்து தப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. இவரும், இவரின் நண்பர் ஒருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சில பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி ஏற்காடு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுடன் நெருக்கமாக இருந்துவிட்டு மாலை 6 மணியளவில் பள்ளி வாசலில் விட்டுள்ளனர். தற்போது அந்த பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.