Latest News
மாணவியின் தலையை தனியாக வெட்டியவருக்கு தூக்கு தண்டனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது தளவாய்ப்பட்டி ஊராட்சியில் சுந்தராபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் இரவு பூக்கட்டி கொண்டிருந்தார்.
அப்போது இதே பகுதியை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் தினேஷ்குமார் என்பவர் திடீரென வீட்டிற்குள் புகுந்து சிறுமியின் தலையை வெட்டி அதை எடுத்து தெரு முச்சந்தியில் வைத்து விட்டு சென்றார்.
அந்த சிறுமியின் இதை பார்த்து கதறி அழுதார்.
இதை பார்த்த தினேஷ்குமாரின் மனைவியும் அவரது சகோதரரும் தினேஷ்குமாரை போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சில ஆண்டுகளாக இவ்வழக்கு சேலம் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
கொடூரன் தினேசுக்கு தூக்கு தண்டனை விதித்ததால் மக்கள் மகிழ்ச்சியைடைந்துள்ளனர். உண்மையில் இது போன்ற செயல்களை செய்தவர்களுக்கு தூக்குதான் சிறந்த தண்டனையாகும்.
