Connect with us

சலீம் கெளஸ் மறைவு- விஜயகாந்த் இரங்கல்

Entertainment

சலீம் கெளஸ் மறைவு- விஜயகாந்த் இரங்கல்

தமிழில் வெற்றி விழா படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்த வில்லன் சலீம் கெளஸ். வெற்றி விழா படத்துக்கு பிறகு விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் சக்கரை கவுண்டர் கதாபாத்திரத்தில் சலீம் கவுஸ் நடித்திருந்தார்.

அதன் பிறகு வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெற்றி விழா படத்தில் ஜிந்தா என்ற கதாபாத்திரத்திலும், சின்னக்கவுண்டர் படத்தில் சக்கரை கவுண்டராகவும், வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் ஆகவும் எல்லா படத்திலும் சிறப்பான வில்லத்தனத்தை சலீம் கெளஸ் வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார். இவரின் மறைவுக்கு நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  விமானம் இயக்கும் வினய்

More in Entertainment

To Top