விருது குறித்து சாலமன் பாப்பையா

22

மூத்த தமிழறிஞரும் முன்னாள் மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆசிரியருமான திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியது. சாலமன் பாப்பையா மதுரையை சேர்ந்தவர் பல்வேறு வருடங்களாக பட்டிமன்ற நடுவராக இருக்கிறார். பட்டிமன்றம் என்றாலே இவர்தான் என நியாபகம் வரும் அளவுக்கு இவர் புகழ் வாய்ந்தவர்.

ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திலும் இவர் நடித்துள்ளார். பத்ம விருதை நான் எதிர்பார்க்கவில்லை. விருது கிடைத்தது மகிழ்ச்சி. இதுவரை தமிழகமக்களும், இலங்கை, அமெரிக்காஉள்ளிட்ட அயல் மண்ணில் வாழும்மக்களும் என்னை நேசித்து எனக்கு பல விருதுகளை வழங்கினாலும்,நான் பிறந்த மண்ணில் மத்திய அரசு விருது வழங்குவது பெருமை. என சாலமன் பாப்பையா கூறியுள்ளார்.

பாருங்க:  அக்டோபர் 15 வரை ஹோட்டல்கள் மூடப்படுமா? அதிர்ச்சி அளித்த தகவல்