கடந்த 90களில் நடுவில் புகழ்பெற்ற சீரியலாக சக்திமான் வந்தது. சிறு குழந்தைகள் இந்த சீரியலை பார்த்து ரசித்தனர். தனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சக்திமான் வந்து காப்பாற்றுவார் என ஒரு ஹீரோவை கொண்டாடினர் அவர்தான் ஹிந்தி நடிகர் முகேஷ் கண்ணா.
இவர் சமீபத்தில் கூறிய ஒரு விசயம் சர்ச்சையாகியுள்ளது. பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் இல்லை அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் பெண்கள் வேலை செய்ய தொடங்கியதால்தான் மீ டூ இயக்கம் தொடங்கியது என கூறியுள்ளார்.
இவர் பெண்கள் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணத்தில் சொன்னதாக சொல்லப்பட்டாலும் இதை சிலர் பெரிதாக்கி வருகின்றனர்.

