Connect with us

Tamil Flash News

மீண்டும் சக்தி செளந்தர்ராஜனுடன் இணையும் ஆர்யா

சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும் அவரின் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை டிக் டிக் டிக், மிருதன், டெடி என எல்லா படங்களுமே வித்தியாசமான கதையமைப்பை கொண்டவை.

இதில் சமீபத்தில் டெடி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஆர்யா –  சக்தி சௌந்தர் ராஜன் ஆகியோர் மீண்டும் புதிய படத்திற்காக இணைகின்றனர்.  இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.  அதேபோல் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. அதை முடித்துக்கொண்டு விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தை ஆர்யா தயாரித்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாருங்க:  சன் டிவியில் நேரடி ரிலீஸ் ஆகும் வணக்கம்டா மாப்ள

Latest News

தந்தை தாய் உட்பட 11 பேர் மீது வழக்கு தொடுத்த விஜய்

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரின் மகன் நடிகர் விஜய். இவர் தனது அப்பா எஸ்.ஏ சந்திரசேகருடன் மோதல் போக்கை சில வருடமாகவே கடைபிடிப்பதாக தெரிகிறது. கடந்த வருடமே தன்னை கேட்காமல் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை எஸ்.ஏ சந்திரசேகர் அறிவித்ததற்கு விஜய் கடுமையாக கோபப்பட்டார்.

இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி தேர்தலில்  விஜய் மக்கள் இயக்கம்  நிற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டதால் தனது பெயரை தனது ரசிகர் மன்ற இயக்கத்தின் பெயரை தன்னை கேட்காமல் பயன்படுத்தக்கூடாது சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடுத்துள்ளார்.

பாருங்க:  11 மணிக்கு ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 11. 05க்கு மணல் அள்ளுங்க- செந்தில்பாலாஜி பேச்சால் சர்ச்சை
Continue Reading

Entertainment

மாணவர்கள் தற்கொலை விரக்தி குறித்து சூர்யா பேசியுள்ள வீடியோ

சமீபத்தில் நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதால் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ.

பாருங்க:  மத்திய அரசு அனுமதி இல்லாமல் விடுதலை ஆனாரா சஞ்சத் தத்? - பரபரப்பு செய்தி
Continue Reading

Entertainment

கஸ்தூரியிடம் பேச ரெடியா

சின்னவர் , ராக்காயி கோயில், இந்தியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் திருமணம் முடித்த பின் நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் சில வருடங்களாக அரசியல் விமர்சகராக எதையும் துணிந்து பேசும் பெண்ணாக சமூக வலைதளங்களில் போற்றப்படுகிறார்.

தினமும் டுவிட்டரில் கஸ்தூரியின் அரசியல் கருத்துக்கள் இல்லாமல் அன்றைய பொழுது விடியாது என சொல்லலாம்.

கஸ்தூரியுடன் பல விசயங்களை கலந்துரையாட இன்ஸ்டா லைவில் அழர் அழைக்கிறார்.

இன்று காலை 9 மணிக்கு அவர் பேசுகிறார்.

பாருங்க:  விஜயகாந்த் கொண்டாடிய தீபாவளி
Continue Reading

Trending