Masala
Masala

தமிழக அரசுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல மசாலா நிறுவனம்

தமிழக அரசு கொரோனா தொற்று காரணமாக மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அவரவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்தால் கொரோனாவை அடியோடு விரட்டி விடலாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு மக்களிடம் மற்றொரு வேண்டுகோளை விடுத்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் பொருளாதார வீழ்ச்சி சந்திக்க நேரிடும், அதன்பொருட்டு மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்யும்படி மத்திய அரசும் மாநில அரசும் வேண்டுகோள் விதித்தது.

SAKTHI MASALA SAKTHI MASALA
SAKTHI MASALA SAKTHI MASALA

இதன் விளைவாக, இந்திய அரசுக்கு மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து கொண்டு வருகின்றனர். தனியார் நிறுவனங்களும் பல் துறை நிறுவனங்களும் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் பிரபல மசாலா நிறுவனம் தமிழக அரசுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. பிரபல மசாலா நிறுவனமான சக்தி மசாலா முன்வந்து தமிழக அரசுக்கு சுமார் 5 கோடியை கொரோனா நிதி உதவியாக அளித்துள்ளது.