தெரியாமல் பேசி விட்டேன்… ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சாக்‌ஷி…

175

ஷெரினுக்கு ஆறுதல் கூறிய போது தான் பயன்படுத்திய வார்த்தைக்காக ரசிகர்களிடம் நடிகை ஷெரின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இது தர்ஷனின் வெற்றியை பாதிப்பதாகவும் வனிதா விஜயகுமார் கூற, ஷெரினுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் ஷெரின் கதறி அழுதார்.

அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி ‘நம்மை பார்த்து நாய் குரைத்தால் நாம் அழக்கூடாது. நான் வெளியே இருக்கும் மக்களை சொன்னேன்’ எனக்கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து தற்போது வெளியேறியுள்ள சாக்‌ஷி, தான் கூறிய கருத்திற்காக மன்னிப்புகேட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

அனைத்து பிக்பாஸ் பார்வையாளர்களுக்கும். எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

எனது அறிக்கை பார்வையாளர்களைப் பொதுமைப்படுத்துவதாக இல்லை. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி. உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் எனக்கு எப்போதும் கிடைத்த அன்பு, ஆதரவு, மற்றும் கருத்தை நான் மதிக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் ப்ளீஸ் என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  நியூ லுக்கை பார்க்க போஸ்டர் அடித்த சிம்பு ரசிகர்கள்