சபரிமலையில் தினமும் 10000 பக்தர்கள் அனுமதி

15

கடந்த ஒரு வருட காலமாக கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் இதுவரை ஐயப்பன் கோவில் வரலாற்றிலேயே இல்லாதபடி கடந்த ஐயப்ப சீசன் காலத்தில் கோவிலுக்கு வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இதனால் அதிகமான பக்தர்கள் வழக்கம்போல் ஐயப்பன் கோவில் செல்ல இயலாமல் போனது.

இந்த நிலையில் தற்போது மாதா மாதம் நடக்கும் பூஜை மற்றும் ஆறாட்டு விழாவுக்காக ஐயப்பன் சன்னதி தமிழ் மாதத்தின் ஓரிரு நாட்கள் திறக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை   நாளை (14ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை முதல் 28ம் தேதி வரை கோயில் நடை  திறந்திருக்கும். இதில் தினமும் 5,000 பக்தர்கள்  தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதற்கான ஆன்ைலன் முன்பதிவு 2 நாட்களில் முடிந்து விட்டது. இந்த நிலையில் சபரிமலையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

பாருங்க:  அடுத்த இரண்டு நாளில் வெப்பச் சலன மழை பெய்ய வாய்ப்பு!
Previous articleஇன்று வெளியாகிறது மண்டேலா பட டீசர்
Next articleமுருங்கைக்காய் சிப்ஸ் படப்பிடிப்பு நிறைவடைந்தது