சபரிமலை சீசன் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. நவம்பர் 16 முதல் ஐயப்ப சீசனுக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த பூஜைகளில் கலந்து கொள்ள அய்யப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்படும் என கருதி அதிகமான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது அதன்படி அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்கள் www.sabarimalaonline.org இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்று இல்லை என சர்ட்டிபிகேட் வேண்டும் எனவும் நிர்வாகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.அதனால் இதற்கெல்லாம் தயார்நிலையில் பக்தர்கள் செல்வது மிகவும் நல்லது.